போக்ராவின் பல இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு மனக்கமானாவை நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் போக்ரா விமானநிலையம், விளையாட்டு மைதானம் போன்ற நேரில் செல்லாத பல இடங்களை பேருந்தில் பயணத்தபடியே பார்த்துக்கொண்டு சென்றோம். வெள்ளையாரு(White river) வழி முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்ல இரும்பினாலான தொங்கு பாலங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.செல்லும் வழி நெடுகிலும் பாதைகள் வளைந்து நெளிந்து சென்றுகொண்டு இருந்தது. சில இடங்களில் மலைச்சரிவும் அதனாலான பாதிப்புகளும் காணப்பட்டன.
போக்ராவிலிருந்து மனக்கமானா 4 மணிநேர பயணம். ஆதலால் இயற்கை காட்சிகளை கண்டுகளித்தது போக பாதி நேரத்தை தூங்கி கழித்தோம்.
சரியாக ஒரு மணிக்கு மனக்கமானாவை அடைந்தோம். எடுத்துக்கொண்டு சென்ற மத்திய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கேபிள் கார் பயணத்திற்கு தயாரானோம்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
