
நாங்கள் தங்கிய ஹோட்டலில் எவரஸ்ட் சிகரத்தை குட்டி விமானத்தில் சுற்றி பார்க்கும் வசதி செய்து கொடுக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, டூர் மேனேஜரை விசாரித்தோம்.
அவரும் எங்களுக்கு சில தகவல்களைக் கொடுத்தார். சிகரத்தை சுற்றி பார்க்க ஒரு நபருக்கு 5600 ரூபாய் என்றார்கள். எங்களுக்குள் கலந்து பேசி வினோத், அவனுடைய அம்மா, நான் மற்றும் எங்களுடன் பயணம் செய்த சிலரும் சேர்ந்து 7 பேர் தயாரானோம். ஏழுபேரில் ஒரு குழந்தையும் உடன் வந்தாள்.
காலை 6 மணிக்கெல்லாம் தயாராக இருக்குமாரு கேட்டுக்கொண்டதால், 1 மணி நேர பயணத்திற்கு வேண்டிய அனைத்தையும் தயார் செய்துவிட்டு இரவு உணவு எடுத்துக்கொண்டு உறங்கச்சென்றோம்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
1 comment:
நீங்க அட்டகாசமான இடங்களுக்கு போயிருக்கீங்க .. நீங்க சாதாரணமா பேசற மாதிரியே எழுதலாமே. இலக்கண சுத்தமா எழுதறது கொஞ்சம் இயல்பா இல்லாத மாதிரி இருக்குங்கிறது என்னோட சிறுபிள்ளைத்தனமான கருத்து.
Post a Comment