அப்படி வேறு ஏதாவது தேவையென்றால் railway canteen-ல் வாங்கி சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.
நாங்கள் சங்கமித்ரா விரைவு வண்டியில் முதலில் அலஹாபாத் சென்று, திரிவேணி சங்கமம் பார்வையிடலே பயணத்தின் ஆரம்பமாக இருந்தது. மாலை 3.30-மணிக்கு வருவதாக இருந்த ரயில் வண்டி சரியாக 3.50-க்கு வந்து சேர்ந்தது.
முன்னதாகவே ticket ரிசர்வேஷன் செய்ததால் தொல்லைகள் இருக்காது என்று நினைத்தால் சில Unreserved பயணிகள் எங்களது இருக்கையில் உட்கார்ந்துகொண்டு நகரவேயில்லை. ஒரு வழியாக அவர்களை சமாளித்து அவரவர் இடங்களில் அமர மூன்று மணி நேரம் போராடவேண்டி இருந்தது.
வினோத் எனக்கும் சேர்த்து கட்டு சாதம் கொண்டுவந்ததால் பயணம் செய்த இரண்டு நாட்களுக்கும், சாப்பாட்டிற்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்லாமல் இருந்தது. அதனால் ரயில்வே கேன்டினின் உதவி தேவையில்லாமல் போனது. ஒரே ஒரு குறை பயணம் செய்தவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற யாவரும், என்னையும் சேர்த்து இரண்டு நாட்களாக குளிக்கவில்லை.
பயணத்தை சென்னை ரயில் நிலையத்தில் மாலை ஆரம்பித்ததால் இரண்டு இரவு, ஒரு முழு பகல் என பயணம் செய்து, சரியாக அதிகாலை 2-மணிக்கு அலகாபாத் இரயில் நிலையத்தை அடைந்தோம்.
எங்கள் பயணக்குழு தலைவர் அனைவரையும் காலை 7-மணிக்குள் தயாராக இருக்குமாறும், இங்கிருந்து திரிவேணி சங்கமம், அலகாபாத் கோட்டை, அநுமன் கோவில் ஆகிய இடங்களுக்கு செல்ல இருப்பதாகவும் கேட்டுக்கொண்டார்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

2 comments:
உங்களை அழைத்துச்சென்ற அந்த குழுவின் பெயர் மற்றும் முகவரி சொல்றீங்களா? வட இந்தியாவை சுத்திப் பாக்கணும்னு கொஞ்ச நாளாகவே எனக்குள்ள இருக்குற சின்ன 'தீ'ல நீங்க கொஞ்சம் பெட்ரோல் ஊத்தீட்டீங்க!! :) அடுத்த பயணம் எப்போ களம்பறாங்க?
அய்யோ சாமி...அந்த trip-ல சாப்பாடும், தங்கும் இடமும் முக்கால்வாசி சரியே இல்ல. அதுமட்டுமில்லாம அவங்க எல்லாருமே retd teachers புது ஆளுங்கல சேக்கமாட்டாங்க.
எதுக்கும் முழுசா படிச்சிபாத்துட்டு முடிவு பண்ணுங்க.
Post a Comment