
இன்பமாக வாழ்ந்த அவர் ராகுலனையும் பெற்றார்.ராகுலன் பிறந்த சில நாட்களிலேயே அவர் துறவு பூண்டார். போகும் போது ராகுலனை எடுத்து கொஞ்சி மகிழ ஆசைப்பட்டாராம். ஆனால் எங்கே அவன் கண்விழித்து யசோதரை எழுந்து விடுவாளோ என்று, இருவரையும் ஒருமுறை பார்த்து விட்டு சென்று விட்டாராம்.
சந்தனன் தயாராக வைத்திருந்த தேரில் சித்தார்த்தரை, அரண்மனையே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அழைத்துக் கொண்டுபோய் காட்டில் இறக்கி விட்டானாம். நீண்ட தூரம் நடந்து சென்ற அவர், வழியில் ஒரு வேடனை பார்த்தாராம். இவர் உடுத்தியிருந்த விலை உயர்ந்த பட்டாடைகளை அவனுக்கு கொடுத்துவிட்டு, அவன் அணிந்திருந்த தோலாடையை இவர் வாங்கி உடுத்திக் கொண்டாராம்.
இப்படி சென்ற அவர் இரண்டு அந்தனர்களின் குருகுலத்தில் தியான பயிற்சியில் ஈடுபட்ட அவர், பயிற்சியில் திருப்தி அடையவில்லை. இவர் கேட்ட கேள்விகளுக்கு அவர்களால் பதில் கூற இயலவில்லை. அவர் கேட்ட கேள்விகள், துக்கத்திற்கான காரணம் என்ன? அதை எப்படி நிவர்த்தி செய்வது.
குருகுலத்தில் இருந்தால் இதற்கான காரணம் தெரிய வராது என்று கடுமையான தவத்தை மேற்கொள்ள சரியான இடத்தை தேடி சென்றாராம். அப்படி செல்லும் போது, குருகுலத்திலிருந்த அவருடைய நண்பர்கள் நாலுபேர் அவருடன் சென்றர்களாம். இப்படி அவர்கள் போனபோது தியானத்திற்கான இடமாக தேர்ந்தெடுத்த இடம் தான் புத்த கயா.சித்தார்த்தர் புத்தரான கதையை கயாவில் பார்க்களாம். நேபாளத்தின் ஒரு சில பகுதிகளை பார்த்து விட்டு அங்கு வருவோம்.
இங்கிருந்து 20 கிமீ தொலைவில் தான் லூம்பினி இருக்கிறது. ரிக்ஷா வண்டிகள் நிறையவே இங்கு இருக்கிறது. அதில் சென்றிருந்தால் கூட மாலை 6 மணிக்குள் திரும்பியிருக்களாம். டூர் மேனேஜருடன் பிரச்சனை என்பதால் அவர் இது போன்ற விஷயங்களை மறைத்துவிட்டார்.
பட்வாலிலிருந்து இரவு 8.30 மணிக்கு போக்ராவை நோக்கி பயணத்தை துவக்கினோம். இரவெல்லாம் பயணம் செய்து காலை 6.30 மணிக்கு போக்ராவை வந்தடைந்தோம்.
பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment