Thursday, December 4, 2008

Phokra to manakamana

போக்ராவின் பல இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு மனக்கமானாவை நோக்கிப் புறப்பட்டோம். போகும் வழியில் போக்ரா விமானநிலையம், விளையாட்டு மைதானம் போன்ற நேரில் செல்லாத பல இடங்களை பேருந்தில் பயணத்தபடியே பார்த்துக்கொண்டு சென்றோம். வெள்ளையாரு(White river) வழி முழுவதும் ஓடிக்கொண்டு இருந்தது. ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு செல்ல இரும்பினாலான தொங்கு பாலங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் மக்கள் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்லும் வழி நெடுகிலும் பாதைகள் வளைந்து நெளிந்து சென்றுகொண்டு இருந்தது. சில இடங்களில் மலைச்சரிவும் அதனாலான பாதிப்புகளும் காணப்பட்டன.

போக்ராவிலிருந்து மனக்கமானா 4 மணிநேர பயணம். ஆதலால் இயற்கை காட்சிகளை கண்டுகளித்தது போக பாதி நேரத்தை தூங்கி கழித்தோம்.

சரியாக ஒரு மணிக்கு மனக்கமானாவை அடைந்தோம். எடுத்துக்கொண்டு சென்ற மத்திய சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு கேபிள் கார் பயணத்திற்கு தயாரானோம்.

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

Wednesday, December 3, 2008

Walk around Phewa Lake

30-09-2008 காலையில் சீக்கிரமாக எழுந்துகொண்டதால் சூரிய உதயம் பட்டு அன்னபூர்னா சிகரம் ஜொலிப்பதை பார்க்க முடிந்தது. இங்கிருந்து பீவா ஏரியின் காலை அழகைக்கான நானும் வினோத்தும் சென்றிருந்தோம்.

அதிகாலையிலேயே சிறுவர்கள் ஏரியில் நீச்சலடித்துக்கொண்டு இருந்தார்கள். சிறுவயதில் நான் கூட நீச்சலடித்திருக்கிறேன். ஆனால் தொடர்ந்து பத்து நிமிடங்களுக்கு மேல் நீந்தியதில்லை. நாங்கள் அங்கு செல்வதற்கு முன்பே அவர்கள் ஏரியில் நீந்திக்கொண்டு இருந்தார்கள். 30 நிமிடங்களுக்கு மேலாகியும் அவர்களில் ஒருவர் கூட கரைக்கு வரவில்லை. அவர்கள் தண்ணீரில் விளையாடுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு. வினோத் அவர்கள் விளையாடுவதை ஆர்வமுடன் படமெடுத்தான்.

ஒரு சில காதல் ஜோடிகள் யாரையும் பொருட்படுத்தாமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தனர். புகைப்படம் எடுக்க அருகில் சென்று அனுமதிகேட்டேன் மறுத்துவிட்டனர்.

இந்த ஏரியின் அருகில் பெரிய விளையாட்டு மைதானம் இருக்கிறது. அவ்வளவு காலையிலும் பதின்வயதுடைய பலரும் கால்பந்தாட்டம் விளையாடுவதை காணமுடிந்தது. மைதானத்திலிருந்து சிறிது தொலைவிலேயே போக்ரா விமானநிலையம் இருக்கிறது.

அலகாபாத்திலிருந்து அயோத்தியா வரை எதுவுமே வினோத்திற்கு பிடிக்கவில்லை ஆதலால் போக்ராவின் இயற்கை அழகு அவனை மிகவும் கவர்ந்துவிட்டது. எனவே மகிழ்ச்சியுடன் நிறைய புகைப்படங்களை ஒடி ஒடி எடுத்துக்கொண்டான். நிறைய வெளிநாட்டினர்களை லென்ஸ் கேமராக்களுடன் ஆர்வமுட
ன் புகைப்படமெடுப்பதை பார்க்க முடிந்தது. அவர்கள் படமெடுப்பதை ஒரு கலையாக செய்கிறார்கள்.

மதியத்திற்குள் மணக்கமானாவிற்கு போகவேண்டி இருந்ததால் அங்கிருந்து புறப்பட்டோம். சரியாக காலை 8.30 மணிக்கு போக்ராவிலிருந்து மணக்கமானாவிற்கு பயணமானோம்.

You tube link: http://in.youtube.com/watch?v=EGcF52pXlN0

பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.