Friday, April 3, 2009

Pashupatinath Temple - Kathmandu

கோவிலின் முகப்பிலே நூறுக்கும் குறையாத லிங்கங்கள் இருக்கின்றன. அதைச்சுற்றியும் செல்லலாம், தவிர்த்துவிட்டும் கோவிலுக்குள் செல்லலாம். அவையனைத்தையும் சுற்றுவதற்கு ஏற்றாற்போல் வழியும் சுற்றி சுற்றி வந்தது. ஒருவழியாக பாதை முடியும் இடத்தில் ஒரு ஆசாமி ருத்ராட்சத்துடன் நின்றுகொண்டிருந்தான். அதையெல்லாம் வாங்காதே என்று வினோதின் அம்மா ஆரம்பத்திலேயே எச்சரிக்கை செய்திருந்தார்கள். சரியென்று நானும் அவரைப் பார்த்தும் பார்க்காதது போல் சென்றுவிட்டேன். எங்கள் தலை மறையும் வரை ஏதேதோ சொல்லி எங்களை வாங்கச்சொல்லி கேட்டுக்கொண்டார். தப்பித்தால் போதுமென்று வேகமாக ஓடி மறைந்தோம்.

சிவனுக்கு கைலாயத்தைத் தவிர்த்து நான்கு முக்கியமான இடங்கள் இருக்கின்றன. அவை 1.தெற்கே இராமநாதர் (தமிழ்நாடு), 2.கிழக்கே விசுவநாதர் (உ.பி), 3.மேற்க்கே சோம்நாத் (குஜராத்) மற்றும் 4.வடக்கே பசுபதிநாத் (நேபாள்).

பசுபதிநாத் கோவில் அண்டை நாடான நேபாளின் தலை நகர் காத்மாண்டுவில் இருப்பதால் இது சிவா பூமியாகக் கருதப்படுகிறது. மலை மகள் இங்கு தவம் செய்ததாகவும், கங்கையே இங்கு பாய்ந்து இடத்தை வளப்படுத்துவதாகவும் மக்கள் நம்புகிறார்கள்.

சிவசக்தி இங்கு வீற்றிருப்பதால் சிவராத்திரி இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியன்று இந்தியாவிலிருந்து கூட பக்தர்கள் சென்று தரிசிப்பதாக கேள்விப்பட்டேன்.சிவனுடைய வாகனமான நந்திக்கு இங்கு சிறப்பான பூஜை செய்வதாகவும், முக்கியத்துவம் தருவதாகவும் கேள்விப்பட்டேன்.

சரியாக கடைசி பூஜை நடக்கும் போது நாங்கள் சென்றோம். பத்து நிமிட பூஜை முடிந்தவுடன் கற்பகிரத்தின் கதவுகள் அடைக்கப்பட்டன. எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ என்று நினைத்துக்கொண்டேன். சிறிதளவு பிரசாதம் கொடுத்தார்கள் வாங்கி நெற்றியில் வைத்துக் கொண்டேன்.கோவிலுள் சின்னச்சின்ன விக்ரகங்கள் இருக்கின்றன. அனைத்தையும் பார்த்துவிட்டு பைரவரிடம் சென்றோம். ஆளுயர கால பைரவரின் உருவம் வழிபட இருந்தது. இதுவரை நான் பார்த்த பைரவரின் விக்ரகங்களில் இதுதான் பெரியது.

கோவிலுக்குல் புகைப்படன் எடுக்க அனுமதி இல்லாததால் எதையும் புகைப்படம் எடுக்க இயலவில்லை. கோவிலை ஒட்டிய பகுதியில் பாக்மதி ஆற்றினை பார்க்கும்படி மேடை ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. நாங்கள் சென்ற பொழுது கரையை ஒட்டிய படித்துறையில் சடலங்கள் தீயிளிடப்பட்டடு எரிந்து கொண்டிருந்தன. மணி 7.30 P.M இருக்கும் அதற்குள் கோவிலை முக்கால் வாசி மூடிவிட்டார்கள் 8 மணிக்குள்(P.M) முழுவதுமாக மூடி விடுவார்களாம்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த கலவரத்தில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய ஒரு விழ எடுத்திருந்தார்கள். அந்த விழாவில் பாடும் பஜனைப் பாடலுக்கு சன்யாசிகள் முதல் சம்சாரிகள் வரை கையில் தீபம் வைத்துக் கொண்டு ஆடினார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, மகள், பேத்தி ஆகிய மூவரும் தாளக்கட்டிற்கு ஏற்றபடி ஆடியது அழகாக இருந்தது. பாக்மதி நதிக்கு ஆரத்தியும் எடுத்தார்கள். பார்ப்பதற்கு நாம் கங்கைக்கு செய்யும் ஆராதனையைப் போல் இருந்தது. அந்த ஆராதனையை அருகில் காண படித்துறைக்குச் சென்றோம்.

படித்துறைக்குச் சென்றதால் நாங்கள் காலணிகளை விட்ட இடம் மறந்து போனது. எந்தப் பக்கம் போவது என்றே தெரியவில்லை. வழியில் விசாரித்துக் கொண்டே போனோம். ஒரு கடையில் இருந்த நேபாளி, "நீங்கள் தமிழர்களா?" என்று கேட்டன். இவனுக்கு எப்படி தமிழ் தெரிந்தது என்று ஆச்சர்யமாக இருந்தது. விசாரித்ததில் எங்கள் ஊரின் பக்கத்திலுள்ள ஒரு கல்லூரியில் இரண்டு வருடம் ஹாஸ்டல் செக்யூரிட்டியாக வேலை செய்திருக்கிறான்.

ஒரு முக ருத்ராடம், பல முக ருத்ராட்சம் போன்றவற்றை ரூபாய் 200 -லிருந்து ரூபாய் 500-க்குள் வாங்கித் தருவதாகச் சொன்னான். அதுபடியே வினோதின் மாமாவிற்காக ரூபாய் 250-ற்கு ஒரு முக ருத்ராட்சம் ஒன்று வாங்கித் தந்தான். பிறகு கோவிலின் முகப்பில் நாங்கள் காலணிகளை விட்ட இடத்திற்கு வழி காட்டினான்.

நாங்கள் திரும்பிய நேரத்தில் அனைத்து கடைகளும் மூடி இருந்தது. "அய்யோ செருப்பு போச்சான்னு நெனச்சி ஒவ்வொரு கடையின் முன்பும் தேடினோம்". பிறகு வினோத் தான் எங்களுடைய செருப்பை கண்டு எடுத்து வந்தான்.

5 comments:

Vishnu - விஷ்ணு said...

பயண கட்டுரைகள் படிக்கிறது ரொம்ப சுகமான அனுபவம். பல சமயங்களில் அந்த கட்டுரைகள் நம்மை அந்த இடத்துக்கே அழைத்து செல்லும்.

நிறைய பயண கட்டுரை எழுதுங்கள். நிறைய இடத்துக்கு உங்கள் கட்டுரைகளால் எங்களை அழைத்து செல்லுங்கள்.

Vishnu - விஷ்ணு said...

blog arachive மட்டும் descending orderla வச்சுடுங்க. உங்கள் புதிய பதிவுகள் அதில மறைந்து இருக்கு.

Unknown said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி விஷ்ணு...

Unknown said...

அண்ணா எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது ஆனால் நீங்க எழுதிஇருந்தத விதம் எனக்கு பிடிச்சு இருந்துச்சு , பரவ இல்ல வட நாட்டுகாரங்க எல்லாம் தமிழர்கள கேவலமா பாபாங்க அப்படினு கேள்விபற்றுகேன் ஆனா அவர்கள நல்லவர்களும் இருகாங்க.

Unknown said...

கடவுள் + நம்பிக்கை கிடையாது. நல்ல விஷயம்...

கடவுள் இல்லாத விஷயம். நம்பிக்கை இருக்குற விஷயம்.

ஆனால் (- X + = -).

உங்களுடைய கருத்தின் மேல் உங்களுக்கு நிறைய நம்பிக்கை(+) இருக்கலாம். அந்த நம்பிக்கையில் எவற்றை எல்லாம் நீங்கள் இல்லையென்று(-) சொல்கிறீர்களோ அது கடைசியில் வென்றுவிடப் போகிறது செந்தில். எல்லோருமே இல்லாமல் தானே போகப் போகிறோம். என்னைப் பொறுத்தவரை "அன்பே சிவம்".

நீங்கள் முத்துவின் நண்பர் என்று நினைக்கிறேன். அகவே இந்த (+, -) மாதிரியான பதில். :-)

வருகைக்கு நன்றி செந்தில்...