அலகாபாத்திலுள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயம் 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதன் நுண்ணிய வேலைப்பாடுகள் சிறப்பாக உள்ளது. மரத்தினால் செய்யப்பட்ட நாற்காலி, மர மேசை மற்றும் பாவ மன்னிப்பு கேட்கும் அறை ஆகியவை சிறப்பாக வடிவமைத்திருக்கின்றனர்.கண்ணாடி பேழைகளால் செய்யப்பட்டுள்ள வேலைப்பாடுகள் மிகவும் அழகு சேர்கிறது. இது ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அலகாபாத்திலுள்ள புனித ஸ்தலங்களுக்குள் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. தேவாலயத்தை சுற்றிலும் உள்ள பசுமையான மரங்கள் கண்களுக்கு குளிர்சியாக இருக்கிறது. ஆனால் தேவாலத்தினுள் சரியான பராமறிப்பு இல்லை. சுத்தமாக வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.
இங்கிருந்து புறப்பட்டு தங்கியிருந்த இடத்திற்கு வந்து மதிய உணவு முடித்து, ராமஜென்ம பூமியான அயோத்தியா நோக்கி பயணம் செய்தோம்.
பயணிப்போம்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.
கிருஷ்ண பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment