நேபாளுக்கு செல்வதற்கு முன் 500 மற்றும் 1000 ரூபாய்களை எடுத்து செல்ல கூடாது, மீறி எடுத்து சென்றால் சோதனை செய்யும் போது எடுத்துக்கொள்வார்கள், மறுபடியும் தரமாட்டார்கள் என்று பயப்படுத்தினார்கள். அப்படி எதுவும் அங்கு நடப்பதாகத் தெரியவில்லை. நான் பார்த்து சில இடங்களில் சர்வ சாதாரணமாக இந்திய பணத்தை நேபாள பணமாக மாற்றிக்கொண்டு இருந்தார்கள். சில பதிவு செய்த பண மாற்று குழுமங்களும் இருக்கின்றன. கடைகளிலும் எந்த பணத்தை கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு மீதி பணத்தை தரும்போது நேபாள பணத்தைத்தான் தருகிறார்கள்.
இது சோனாலி, போக்ரா, காத்மண்டு என எல்லா இடங்களிலும் நடந்தது. முக்கியமாக ஒரு பொருள் 90 ரூபாய் என்று சொல்கிறார்கள். நாம் இந்திய பணம் 100 ரூபாய் கொடுத்தால் 10 ரூபாய் நேபாள் பணத்தை மீதி தருகிறார்கள்.ஆனால் அவர்கள் நமக்கு தர வேண்டியது 16 நேபாள பணம். இதனால் நமக்கு 6 நேபாள ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. எல்லோரும் இப்படிதான் என்று இல்லை. சிலர் ஏமாற்றுகிறார்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பயணிப்போம்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.
No comments:
Post a Comment